Thursday, November 22, 2007

கமல்"காந்த்"

தசாவதாரம் பொங்கலுக்கே வெளிவரும் எனத் தெரிகிறது. தசாவதாரத்தில் கமல் போட்டிருக்கும் வேடங்களை எதிர்வுகூறும் முயற்சிகள் நடந்துவருகின்ற இவ்வேளையில் ஓர் ரசிகரின் குறும்பு இதோ ...




இதற்கிடையில் கமல் சமீபத்தில் எழுதிய கவிதை ஒன்று...

மனித வணக்கம்

தாயே, என் தாயே!
நான்உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே
என் மனையாளின்
மானசீக சக்களத்தி, சரண்.

தகப்பா, ஒ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்
பொழிப்புரை நான் சொல்கிறேன்.

தமையா, ஒ தமையா!
என் தகப்பன் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமைக்காய், ஓ தமைக்காய்!
தோழி, தொலைந்தே போனையே
துணை தேடிப் போனாயோ

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டப் படி எல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும் வரை

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல
எனைப் பிரிந்து நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விடமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடை எனும் அகந்தையுடன்
எனதம்மணத்தை கேலி செய்வாய்
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மனத்தின் விளம்பரங்கள்

மதமொன்றும், குலமொன்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழை திருத்து.
எனது கவி உனது தான்.

ஆம்.
நாளை உன் வரியில் நான் தெரிவேன்

No comments: